ADDED : டிச 02, 2025 08:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: செல்லம்பட்டி ஒன்றியம் கருமாத்துார், கோவிலாங்குளம், புள்ளநேரி உள்ளிட்ட கிராமங்களில் இலவச வீட்டு மனைப்பட்டா கேட்டு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் உசிலம்பட்டி தாலுகா அலுவலகம் முன்பாக குடியேறும் போராட்டம் நடத்தினர்.
மாவட்டத் தலைவர் காசி,செயலாளர் உமாமகேஸ்வரன், ஒன்றியத்தலைவர் முத்துப்பேயாண்டி, மா.கம்யூ., மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகன்,ஒன்றிய செயலாளர்கள் உசிலம்பட்டி ராமர், செல்லம்பட்டி கணேசன், விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகிகள் ஜெயமணி, சிங்கராஜ், காசிமாயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.'முன்னுரிமை அடிப்படையில் பட்டா வழங்கப்படும்' என தாசில்தார் பாலகிருஷ்ணன் தெரிவித்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர்.

