ADDED : டிச 11, 2024 06:33 AM
கடச்சனேந்தல்: கடச்சனேந்தல் அருகே புதுப்பட்டி கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.
கடச்சனேந்தலில் இருந்து ஒத்தக்கடை செல்லும் மெயின் ரோட்டின் இடதுபுறம் புதுப்பட்டி செல்லும் ரோடு, கொட்டகைமேடு, அரும்பனுார் கிராமங்களை இணைக்கும் முக்கிய ரோடாக உள்ளது.
இந்த ரோட்டில் 750 மீ., துாரத்திற்கு தெருவிளக்குகள்இல்லை. 300 மீ., துாரத்திற்கு தெருவிளக்குகள் இருந்தும் பல நாட்களாக எரியவில்லை.
இதனால் இரவில் அதிகளவில் விபத்துகள் ஏற்படுகின்றன.
''இப்பகுதியில் குடித்துவிட்டு ரோட்டோரங்களில் காலி மதுபாட்டில்களை வீசிச் செல்வதுடன் இருட்டை பயன்படுத்தி திருட்டு, வழிப்பறி சம்பவங்களில் சமூக விரோதிகள் ஈடுபடுகின்றனர்.
விஷ ஜந்துகளின் நடமாட்டமும் உள்ளதால்அவ்வழியேஇரவில்அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலையுள்ளது.
புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருவிளக்குகளை உடனே சீரமைக்க வேண்டும்'' என அப்பகுதியினர் வலியுறுத்தினர்.

