நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான், : சோழவந்தான் நகரி கல்வி இன்டர்நேஷனல் பள்ளி மாணவர் ஜெய்டம்பரிஷ், சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் 'கேண்டிடேட் மாஸ்டர்' பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
பிளஸ் 1 படிக்கும் ஜெய்டம்பரிஷ் சிறுவயது முதலே சதுரங்கத்தில் ஆர்வம் கொண்டவர். பல மாநில, தேசிய போட்டிகளில் வென்று உலகத் தரவரிசைக்கு முன்னேறியுள்ளார். தற்போதைய 'பிடே' ரேட்டிங் 2256. அவர் 'இன்டர்நேஷனல் மாஸ்டர்', 'கிராண்ட் மாஸ்டர்' பட்டம் பெற்று சாதனை படைக்க பள்ளி நிர்வாகம், பெற்றோர் வாழ்த்து தெரிவித்தனர்.