
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: தஞ்சாவூரில் அல்டிமேட் அமைப்பின் சார்பில் உலக சாதனை நிகழ்வுக்கான போட்டி நடந்தது.
இதில் கிடாரிப்பட்டி லதா மாதவன் கலை, அறிவியல் கல்லுாரி வணிகவியல் இளங்கலை 2ம் ஆண்டு மாணவி ஜமுனா தேவி 3 கி.மீ., நடைப்பயிற்சி சிலம்பத்தில் முதலிடம் பெற்று உலக சாதனை படைத்தார். வெற்றி பெற்ற மாணவியை கல்லுாரி சேர்மன் மாதவன், செயல் இயக்குனர் தினேஷ், இணைச் செயலாளர் ஜெகன், செயல் அலுவலர்கள் முத்துமணி, பிரபாகரன் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் பாராட்டினர்.