ADDED : செப் 18, 2025 04:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர் : மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா காளப்பன்பட்டி ராஜ்குமார் மகன் கவுதம் 18. இவர் கருமாத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
அதே ஊரைச் சேர்ந்த முருகன் மகன் அருண்பாண்டி 19. உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
இவர்கள் இருவரும் நேற்று வழக்கம்போல் டூவீலரில் கல்லூரிக்கு சென்றனர். மாலை கல்லூரி விட்டு வீடு திரும்புவதற்காக காளப்பன்பட்டி அருகே டூவீலரில் வந்து கொண்டிருந்தனர். அப்போது மின்னல் தாக்கி கவுதம் இறந்தார். அருண் பாண்டி காயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். சேடப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.