/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
புகைப்படங்கள் குறித்து மாணவர் கலந்துரையாடல்
/
புகைப்படங்கள் குறித்து மாணவர் கலந்துரையாடல்
ADDED : டிச 19, 2025 05:59 AM
மதுரை: மதுரை சொக்கி குளத்தில் டி.வி.எஸ்., கல்பதரு சார்பில், சமூக மாற்றம், முன்னேற்றத்தில் புகைப்படக் கலையின் பங்கை விளக்கும் கலந்துரையாடல் நடந்தது.
தியாகராஜர் கல்லுாரி முன்னாள் முதல்வர் ராஜா கோவிந்தசாமி, சமூக பொறுப்புடன் கூடிய படைப்பாற்றல் குறித்து பேசினார். மதுரை காமராஜ் பல்கலை பேராசிரியர் நாகரத்தினம், சமூக மாற்றத்தில் புகைப்பட ஆவணப்படுத்தலின் சக்தி குறித்து அனுபவங்களை பகிர்ந்தார். இறகுகள் அமிர்தா நேச்சர் நிறுவனர் ரவீந்திரன் நடராஜன், பறவைகள், இயற்கை ஆவணப்படுத்தலின் அவசியம் குறித்து பேசினார். பாத்திமா கல்லுாரி பேராசிரியர் கிளாடியஸ் குண ரஞ்சனி, சமூக உணர்வுடன் கூடிய காட்சி கதையாக்கத்தின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார்.
கல்பதரு திட்ட மேலாளர் சரத்குமார், புகைப்படக் கலை எவ்வாறு பின்தங்கிய சமூகங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவியுள்ளது என்பது குறித்து பேசினார். புகைப்படப் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

