ADDED : நவ 23, 2026 11:39 PM
அ நிறம் | அளவு
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மேலரத வீதியை சேர்ந்த நீதி மன்னன் தி.மு.க., பிரமுகர்.
இவரது மகன் குபேரராஜா 19, சட்டக்கல்லுாரியில் முதலாமாண்டு படித்தார். அவர் இன்று (நவ.,23) மாலை வீட்டிலிருந்து டூவீலரில் அவனியாபுரம் சென்ற போது தியாகராஜர் பொறியியல் கல்லுாரிக்கு செல்லும் ரோடு பிரிவில் எதிரே வந்த வாகனத்தின் மீது மோதாமல் இருப்பதற்காக விலகிய போது நிலை தடுமாறி அப்பகுதியில் இருந்த சுவற்றில் மோதி சம்பவ இடத்திலேயே இறந்தார். திருப்பரங்குன்றம் போலீசார் விசாரிக்கின்றனர்.
