ADDED : ஏப் 06, 2025 05:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை மாயாண்டிபட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில், தேசிய கண்டுபிடிப்பு வாரம் திட்டத்தின் கீழ் மரத்தோட்டங்கள், நீர் மேலாண்மை மேம்படுத்தும் வகையில் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா தலைமையாசிரியர் திவ்யநாதன் தலைமையில் நடந்தது.
மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன விரிவுரையாளர் கீதாராணி துவக்கி வைத்தார்.
மரக்கன்றுகளை பாதுகாக்கும் வகையில் அவற்றை சுற்றி கம்பி வேலிகள் அமைக்கப்பட்டன.
ஒவ்வொரு மரக்கன்றுக்கும் மாணவர்கள், பெற்றோர் பெயர் சூட்ட தீர்மானிக்கப்பட்டது. ஆசிரியர்கள் ரமாபிரியா, பிரேமலதா செல்வி, பாஸ்கரன், சுகந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

