ADDED : செப் 28, 2026 06:13 PM
அ நிறம் | அளவு
மேலுார்: மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் மாவட்ட அளவிலான முதலமைச்சர் டிராபி நீச்சல் போட்டி நடந்தது.
இப் போட்டியில் கிடாரிப்பட்டி லதா மாதவன் பொறியியல் கல்லுாரி முதலாம் ஆண்டு மாணவர் சந்தோஷ்குமார் முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் வென்றார். வெற்றி பெற்ற மாணவரை சேர்மன் மாதவன், செயல் இயக்குனர் தினேஷ், இணை செயலாளர் ஜெகன், முதல்வர் ஞானசேகரன், செயல் அலுவலர் பிரபாகரன் பாராட்டினர்.
