ADDED : செப் 28, 2026 06:13 PM
திருப்பரங்குன்றம்: மதுரை பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி வணிகவியல் முதுகலை, ஆராய்ச்சித் துறை சார்பில், மாணவர்களின் படைப்பாற்றல், பாரம்பரியக் கலைகள் மற்றும் அனுபவவழிக் கற்றலை ஊக்குவிக்கும் வகையில் கைவினைப் பயிற்சி பட்டறை நடந்தது.
மதுரை கல்லுாரி, மீனாட்சி, சவுராஷ்டிரா, மங்கையர்க்கரசி உட்பட பல்வேறு கல்லுாரிகளின் 100க்கும் மேற்பட்ட மாணவியர், 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். மாணவியருக்கு முன்னாள் மாணவி ஐஸ்வர்யா, மாணவர்களுக்கு ஹரி பிரசாத் பயிற்சி அளித்தனர்
களி மண்ணில் கொலு பொம்மைகள், அலங்காரப் பொருட்கள் தயாரிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. முதல்வர் ராமசுப்பையா தலைமை வகித்தார். மாணவி சங்கீதா வரவேற்றார். மாணவி யாமினி நன்றி கூறினார்.
துறைத்தலைவர் சுரேஷ்பாபு, பேராசிரியர்கள் அற்புதராஜ், கீதா, போதை நாச்சியார், தேவிகா, பால சத்யா, கஜ பிரியா, சாய் மோகனா, மணிமுத்து, நந்தினிதேவி ஒருங்கிணைத்தனர்.
