நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: திருமங்கலம் கற்பக நகர் ஜெய விருமாண்டி 19. இவரும், அதே பகுதியை சேர்ந்த சஞ்சய், ஆகாஷ் ஆகியோரும் தனியார் கல்லுாரி மாணவர்கள். நேற்று முன்தினம் நண்பரின் டூவீலரை வாங்கிக்கொண்டு கல்லுாரி சென்று மீண்டும் மாலையில் வீடு திரும்பினர். ஹெல்மெட் அணியவில்லை.
தனக்கன்குளம் விலக்கு பகுதியில் வாகனத்தை முந்த முயன்றபோது எதிரே வந்த சரக்கு வாகனம் மோதியது. மூவரும் காயமடைந்தனர். நேற்று சிகிச்சை பலனின்றி ஜெய விருமாண்டி இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.