/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
திடீரென தீப்பற்றி எரிந்த கார் உயிர் தப்பிய மாணவர்கள் அசம்பாவிதம் தவிர்ப்பு

ADDED : ஆக 09, 2025 05:11 AM

உசிலம்பட்டி: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பொட்டுலுப்பட்டியைச் சேர்ந்தவர் காசிப்பாண்டி 45. இவர் தன் காரில் செக்கானூரணி தனியார் மெட்ரிக் பள்ளியில் பயிலும் தன் குழந்தைகள் மற்றும் கட்டகருப்பன்பட்டியைச் சேர்ந்த பள்ளி மாணவர்களை தினமும் அழைத்து சென்று திரும்ப அழைத்து வருவார்.
நேற்று மாலை 5:30 மணியளவில் பள்ளி முடிந்து மாணவர்களை கட்டக்கருப்பன்பட்டியில் இறக்கி விட்டு 6 மாணவர்களுடன் பொட்டுலுப்பட்டிக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தார். போலிபட்டி அருகில் மதுரை- - போடி அகல ரயில் பாதை தரைவழிப் பாலம் வழியாக சென்ற போது கார் திடீரென தீப்பற்றி எரியத்துவங்கியது. சுதாரித்த காசிப்பாண்டி காரை நிறுத்தி விட்டு மாணவர்களை வெளியேற்றினார். கார் முழுதும் பற்றி எரிந்தது.
உசிலம்பட்டி தீயணைப்பு நிலைய அலு வலர் ஜீவா மற்றும் வீரர்கள் போராடி தீயை கட்டுப்படுத்தினர். கார் முழுதும் எரிந்து முற்றிலும் சேதமடைந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.