/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாணவர்கள் தொழில் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்
/
மாணவர்கள் தொழில் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்
மாணவர்கள் தொழில் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்
மாணவர்கள் தொழில் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்
ADDED : ஏப் 04, 2025 05:17 AM

திருப்பரங்குன்றம்: மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லுாரியில் 67வது கல்லுாரி நாள் விழா தாளாளர் ஹரி தியாகராஜன் தலைமையில் நடந்தது. முதல்வர் அசோக்குமார் ஆண்டறிக்கை வாசித்தார்.
இஸ்ரோ முன்னாள் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை பேசியதாவது:
மாணவர்கள் தங்களின் தொழில் திறமையை வளர்த்துக் கொள்வதின் மூலம் வேலைவாய்ப்பின்மையை தவிர்க்கலாம். மாணவர்கள் படிக்கும் காலங்களில் கண்டுபிடிப்புகளில் ஈடுபட வேண்டும். அதன் மூலம் பெரிய வெற்றி பெறலாம்.
கண்டுபிடிப்புகளுக்கு அதிக பணம் தேவையில்லை. உங்களது செயல் முறைகள்தான் முக்கியம். மாணவர்களைச் சுற்றி பல பொன்னான வாய்ப்புகள் உள்ளன. அவற்றை கண்டறிந்து நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
பட்டம் பெற்றதோடு தொழில் துறையின் அறிவுதிறன்களை வளர்த்துக் கொண்டே இருந்தால்தான் வெற்றி பெற முடியும். விமான நிலையங்களில் தினம் விமானங்கள் வந்து செல்வது போல் வரும் காலங்களில் ஒவ்வொரு நாளும் சிறிய வகை செயற்கைக்கோள் செலுத்தும் நிலை ஏற்படும் என்றார்.
சிறந்த மாணவர்களான சூரிய பிரகாஷ், ஸ்ரீதன், மகாலட்சுமி, ஐஸ்வர்யாவுக்கு பரிசு வழங்கப்பட்டது. இயக்குனர் திருவேங்கடம் நன்றி கூறினார்.

