நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: மைக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அறிவியல் மாநாட்டில் சமர்ப்பிக்க நீரை பற்றிய செயல் திட்டம் தயாரிக்கும் பணியில் மாணவர்கள் ஈடுபட்டனர்.
மதுரை காமராஜ் பல்கலை வேதியியல் பேராசிரியர் ராஜன், மாநில வானவில் ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், மதுரை மாவட்ட துளிர், அறிவியல் இயக்கத் திட்ட ஒருங்கிணைப்பாளர் காமேஷ் வழிகாட்டினர். நீரை பரிசோதித்து, நீரின் தன்மை குறித்து மாணவர்களுக்கு ராஜன் விளக்கம் அளித்தார். ஏற்பாடுகளை ஆசிரியை தாமரைச்செல்வி செய்திருந்தார்.

