ADDED : செப் 20, 2024 05:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை மாடக்குளத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை மாணவர்கள் விடுதி உள்ளது. இங்கு வார்டனாக பணியாற்றிய சபாபதியை விதிமீறல் காரணங்களால் அரசு தற்காலிக பணிநீக்கம் செய்தது. மாணவர்கள் அவர் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
தாசில்தார் திருநாவுக்கரசு, ஆதிதிராவிடர் நலத்துறை கண்காணிப்பாளர் சேவியர், அதிகாரிகள் அம்மாணவர்களிடம் பேச்சு நடத்தி விளக்கினர். மாணவர்கள் கலைந்தனர்.