/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கல்லுாரி செமஸ்டர் தேர்வில் மாறிய வினாக்களால் மாணவர்கள் அதிர்ச்சி
/
கல்லுாரி செமஸ்டர் தேர்வில் மாறிய வினாக்களால் மாணவர்கள் அதிர்ச்சி
கல்லுாரி செமஸ்டர் தேர்வில் மாறிய வினாக்களால் மாணவர்கள் அதிர்ச்சி
கல்லுாரி செமஸ்டர் தேர்வில் மாறிய வினாக்களால் மாணவர்கள் அதிர்ச்சி
ADDED : நவ 15, 2025 01:34 AM
மதுரை: மதுரை காமராஜ் பல்கலைக்குட்பட்ட கல்லுாரிகளில், நேற்று பி.பி.ஏ., மாணவர்களுக்கு நடத்தாத பாடங்களில் இருந்து வினாக்கள் கேட்கப்பட்டதால் தேர்வு ரத்து செய்யப்பட்டது.
இப்பல்கலைக்கு மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் மாவட்டங்களில் உள்ள 110 கல்லுாரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கான முதல் பருவத்தேர்வு துவங்கிஉள்ளது. நேற்று பி.பி.ஏ., மாணவர்களுக்கு 'அக்கவுண்டிங் மேனேஜர் -1' என்ற மெயின் தேர்வு நடந்தது.
அப்போது, மாணவர்களுக்கு வழங்கிய வினாத்தாளில் முதல்பருவ பாட பகுதியில் உள்ள வினாக்கள் இடம்பெறாமல், இன்னும் நடத்தாத இரண்டாம் பருவ பாடங்களில் இருந்து வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. இதனால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இத்தகவல் பல்கலைக்கு தெரிவிக்கப்பட்டது. தேர்வாணையர் முத்தையா தேர்வை தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
பேராசிரியர்கள் கூறியதாவது:
பருவத்தேர்வுக்கான வினாத்தாள்களை பேராசிரியர்கள் குழு தயாரிக்கும். அதன் பின் அந்த வினாத்தாள் குறித்து சிறப்பு ஆசிரியர்கள் குழு மூலம் பரிசீலினை செய்ய வேண்டும். சில ஆண்டுகளாக சிறப்பு பேராசிரியர் குழுக்கள் வினாத்தாள்களை பரிசீலனை செய்வதில்லை.
இதனால் கடந்தாண்டும் இதுபோல் ஒரு தேர்வில் வினாத்தாளில் குழப்பம் ஏற்பட்டது.
வினாத்தாள் பரிசீலனை செய்ய அவர்களுக்கு பல்கலை சார்பில் மதிப்பூதியம் வழங்க வேண்டும். இந்த செலவை பல்கலை மிச்சப்படுத்துவதற்காக வினாத்தாள்கள் மீதான பரிசீலனை செய்யப்படுவதில்லை. இதை தவிர்க்க பல்கலை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறினர்.

