/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பாதுகாப்பற்ற சூழலில் படிக்கும் மாணவர்கள்
/
பாதுகாப்பற்ற சூழலில் படிக்கும் மாணவர்கள்
ADDED : ஆக 10, 2025 04:02 AM

வாடிப்பட்டி: வாடிப்பட்டி அருகே தாதம்பட்டி துவக்கப் பள்ளியில் மாணவர்கள் பாதுகாப்பற்ற சூழலில் படிப்பதால் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இங்குள்ள தாதம்பட்டி காலனி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் 70 மாணவர்கள் படிக்கின்றனர். 22 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட வகுப்பறை தரை தளத்தில் பராமரிப்பு என 'டைல்ஸ்' பதித்துள்ளனர். ஆனால் மேலே தண்ணீர் கசிகிறது. இதனருகே 2008ல் கட்டிய வகுப்பறைகள் பராமரிப்பின்றி மழை நேரத்தில் உள்ளே நீர் ஒழுகுகிறது. ஈரமான வகுப்பறை தளத்தில் அமர்ந்து மாணவர்கள் சிரமப்படுகின்றனர்.
வார்டு கவுன்சிலர் பூமிநாதன்: வகுப்பறை கட்டட மேற்பூச்சுகள் பெயர்ந்துள்ளன. பழுதடைந்த கட்டடம் இடிக்கப்பட்ட பகுதியில் 3 ஆண்டுகளுக்கு மேல் தடுப்புச் சுவர் கட்டப்படவில்லை. கால்நடைகள் மற்றும் புதரிலிருந்து விஷ ஜந்துக்கள் பள்ளிக்குள் வருகின்றன. இங்கிருந்த அங்கன்வாடி மையம் இடிக்கப்பட்டு ஓரண்டுகளுக்கு மேலாகிறது. மாணவர்கள், ஆசிரியர்கள் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் உள்ளனர்.
பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என்றார்.