/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
35 ஆண்டுக்குப்பின் சந்தித்த மாணவர்கள்
/
35 ஆண்டுக்குப்பின் சந்தித்த மாணவர்கள்
ADDED : மே 05, 2025 05:03 AM

மதுரை : டி.கல்லுப்பட்டி காந்திநிகேதன் மேல்நிலைப் பள்ளியில் 1990 - 91 ல் பிளஸ்டூ முடித்த மாணவர்கள் 36 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் சந்தித்தனர்.
இப்பள்ளியின் மாணவர்கள் பல்வேறு பகுதிகளில் பணியாற்றி வருகின்றனர். இவர்களை முன்னாள் மாணவர்கள் பாண்டுரங்கன், சமூக ஆர்வலர் குமார், சப் கலெக்டர் முத்துலட்சுமி, தொழிலதிபர் சுந்தரராஜ் ஒருங்கிணைத்தனர். திருமங்கலத்தில் ஒன்று கூடிய இவர்கள் முன்னாள் ஆசிரியர்கள் முத்துராமலிங்கம், அப்பாஸ் அலி, சக்திவேல் ஆகியோருடனான பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
அடுத்த சந்திப்பில் மேலும் அதிக மாணவர்களை கண்டறிந்து சந்திப்பது, முன்னாள் ஆசிரியர்கள் அனைவரையும் அழைத்து பாராட்டுவது, தற்போதுள்ள மாணவர்களில் பின்தங்கியோருக்கு நிதிஉதவி அளிப்பது, நிதிஉருவாக்கி சமூகசேவைக்கு பயன்படுத்துவது என தீர்மானம் நிறைவேற்றினர்.