தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/குவாரியால் பாதிப்பு குறித்து ஆய்வு

குவாரியால் பாதிப்பு குறித்து ஆய்வு

குவாரியால் பாதிப்பு குறித்து ஆய்வு


UPDATED : அக் 07, 2026 08:57 PM

ADDED : அக் 07, 2026 07:08 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 07, 2026 08:57 PM ADDED : அக் 07, 2026 07:08 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருமங்கலம்:திருமங்கலம் தாலுகா பொன்னமங்கலத்தைச் சுற்றி 6 கல் குவாரிகள் உள்ளன. இங்கு பாறைகளை உடைக்க வைக்கப்படும் வெடிகளால் பொன்னமங்கலம், சவுந்தரராஜபுரம் காலனி வீடுகள் சேதமடைந்தன. இதுதொடர்பாக மணிகண்ட ராஜா என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். சட்டப்பணிகள் ஆணைக்குழுவினர், வருவாய்த் துறையினர், பொதுப்பணித்துறை இணைந்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

நேற்று ஆய்வுக்காக அதிகாரிகள் சென்றனர். அப்போது குறிப்பிட்ட வீடுகளை மட்டும் ஆய்வு செய்வதாக கூறி சவுந்தரராஜபுரம் காலனியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அனைத்து வீடுகளையும் ஆய்வு செய்ய வேண்டும் எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து உரிய போலீஸ் பாதுகாப்போடு வீடுகள் ஆய்வு செய்யப்படும் எனக்கூறி அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us