நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரையில் வெள்ளம் பாதித்த பகுதிகள் மற்றும் வைகை கரை பகுதிகளை அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன் ஆய்வு செய்தனர்.
கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அருண் தம்புராஜ் தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது. கலெக்டர் சங்கீதா, மேயர் இந்திராணி பொன்வசந்த், மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார், தளபதி எம்.எல்.ஏ., அலுவலர்கள் கலந்து கொண்டனர். மழைநீர் வடிகாலுக்கான தற்காலிக வாய்க்கால் வெட்டுவது, நிவாரணம் வழங்குவது போன்ற பணிகளை செய்ய அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டனர்.