/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அபாய கட்டடத்தில் துணை சுகாதார நிலையம்
/
அபாய கட்டடத்தில் துணை சுகாதார நிலையம்
ADDED : நவ 09, 2024 04:37 AM

பாலமேடு : அலங்காநல்லுார் ஒன்றியம் வலையபட்டி ஊராட்சியில் துணை சுகாதார நிலையம் பழுதடைந்த ஓட்டு கட்டடத்தில் செயல்படுகிறது. இதனால் இங்கு பணிபுரிபவர்கள், சிகிச்சைக்கு வரும் குழந்தைகள், கர்ப்பிணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.
1962ல் கட்டப்பட்ட கட்டடம், ஓடுகள் சேதமடைந்துள்ளன. மழைநீர் ஒழுகுகிறது, விஷ பூச்சிகள் உலா வருகின்றன. கட்டடம் வலுவிழுந்து உள்ளதால் விபத்து அபாயம் உள்ளது. புதிய கட்டடம் கட்ட வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
ஊராட்சி தலைவி காயத்ரி: இப்பகுதி கிராமங்களை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயன்பெறுகின்றனர். எனவே சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி புதிய கட்டடம் கேட்டு கலெக்டர், துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அளித்துள்ளேன் என்றார்.