UPDATED : நவ 13, 2026 07:14 PM
ADDED : நவ 13, 2026 07:14 PM
அ நிறம் | அளவு
மதுரை: தோட்டக்கலைத்துறை சார்பில் மாடித்தோட்ட ‘கிட்’ மானிய விலையில் குடும்ப தலைவிகளுக்கு வழங்கப்படுகிறது.
தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் பிரபா கூறியதாவது: ஆறு எண்ணிக்கையில் செடி வளர்ப்புப் பைகள், ஒன்றரை கிலோ அளவு தென்னை நார்க்கட்டி, 6 வகையான காய்கறி விதைகள், பாஸ்போ பாக்டீரியா, அசோஸ்பைரில்லம் உயிர் உரங்கள், டிரைக்கோடெர்மா விரிடி, வேப்பெண்ணெய், இரண்டு கிலோ மண்புழு உரம், செடி வளர்ப்பு கையேடு அனைத்தும் சேர்த்து ரூ.1450. மதுரை கிழக்கு, மேற்கு, திருப்பரங்குன்றம் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் 50 சதவீத மானியவிலையில் ரூ.725 கொடுத்து மாடித்தோட்ட ‘கிட்’ வாங்கலாம் என்றார்.
