ADDED : ஆக 23, 2025 04:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : தோட்டக்கலைத்துறை சார்பில் மாடித்தோட்டம் அமைப்பதற்கான 'கிட்' பைகள் 50 சதவீத மானிய விலையில் வழங்கப்படுகிறது.
செடி வளர்ப்புக்கான 6 பைகள், 12 கிலோ தென்னை நாற்றுகள், 6 வகை காய்கறி விதைகள், அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, டிரைகோடெர்மா விரிடி தலா 200 கிராம், வேப்பெண்ணெய் மருந்து 100 மில்லி, மாடித்தோட்ட காய்கறி வளர்ப்பு கையேடு ஆகியவற்றின் மதிப்பு ரூ.900. இவற்றை 50 சதவீத மானிய விலையில் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் வாங்கலாம். மதுரை கிழக்கு தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகம் தற்காலிகமாக கருப்பாயூரணி சமுதாயக்கூடத்திலும், மதுரை மேற்கு அலுவலகம் பழைய ராமநாதபுர கலெக்டர் அலுவலக வளாகத்திலும் செயல்படுகிறது.