ADDED : மார் 27, 2025 04:54 AM
மதுரை: தோட்டக்கலை துறை சார்பில் தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்டத்தின்கீழ் பழங்கள், காய்கறிகள், பூக்களை சேகரித்து தரம் குறையாமல் ஏற்றுமதி செய்யும் வகையில் குளிர்பதன கிடங்கு அமைக்க மானியம் வழங்கப்படுகிறது.
துணை இயக்குநர் பிரபா கூறியதாவது:
பூ, பழம், காய்கறிகள் அறுவடை செய்தவுடன் உள் சந்தைகளில் சீராக விற்பனை செய்வதை ஊக்குவிக்கவும் பண்ணையில் அறுவடை செய்தவுடன் குளிரூட்டப்பட்ட கிடங்கில் அமைப்பதன் மூலம் வெப்பநிலையை சரிசெய்து அவற்றின் ஆயுட்காலத்தை சற்றே நீட்டிக்கும் வகையில் குளிர்பதன கிடங்கு அமைக்கலாம்.
வெளி மண்டல வெப்பநிலை கட்டுப்பாட்டு முறையில் பழங்கள், காய்கறி, பூக்களை 6 டன் கொள்ளளவில் சேமிக்க 35 சதவீத மானியம் பெறலாம். குளிர்பதன கிடங்கு அமைத்த பின் மானியம் விடுவிக்கப்படும். மதுரை மாவட்டத்திற்கு ரூ.8.75 லட்சம் மானியம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆர்வமுள்ள விவசாயி அல்லது தொழில்முனைவோர்கள் தோட்டக்கலை துணை இயக்குநர் அல்லது அந்தந்த வட்டார உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம் என்றார்.