ADDED : ஏப் 20, 2025 04:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம் : திருமங்கலம் --- கல்லுப்பட்டி ரோட்டில் ஆலம்பட்டி சேடப்பட்டி பிரிவு அருகே அண்டர் பாஸ் பாலம் அமைக்கப்படுகிறது. இந்த பாலம் ஆலம்பட்டி கிராமத்தின் மையப்பகுதியில் முடிவடைகிறது.
ஊருக்கு மையப்பகுதியில் ரோடு அமைவதோடு பாலமும் மையப்பகுதியில் முடிவடைவதால் அந்தப் பகுதியை கடந்து செல்லும் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் விபத்தில் சிக்குகின்றனர்.
இதை கண்டித்து 2 மாதங்களுக்கு முன்பு ஆலம்பட்டி பொதுமக்கள் ரோடு மறியலில் ஈடுபட்டனர்.
சட்டசபை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் உதயகுமாரும் மறியலில் ஈடுபட்டார்.
இதன் எதிரொலியாக தற்போது ஆலம்பட்டி கிராமத்தில் பள்ளி அருகில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.

