/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
உழைப்பு, உறுதி இருந்தால் வெற்றி நடிகர் சரத்குமார் பேச்சு
/
உழைப்பு, உறுதி இருந்தால் வெற்றி நடிகர் சரத்குமார் பேச்சு
உழைப்பு, உறுதி இருந்தால் வெற்றி நடிகர் சரத்குமார் பேச்சு
உழைப்பு, உறுதி இருந்தால் வெற்றி நடிகர் சரத்குமார் பேச்சு
ADDED : மார் 01, 2026 05:47 AM
மதுரை: 'உண்மை, கடின உழைப்பு, உறுதி, நேர்மை இருந்தால் வெற்றியடையலாம்,' என ஏற்றுமதி கருத்தரங்கில் நடிகர் சரத்குமார் பேசினார்.
'யு எக்ஸ்போர்ட்' (ஒய்.இ.,) அமைப்பு சார்பில் 'சமிட் 2026 தி டிஜிட்டல் ஏரா ஆப் எக்ஸ்போர்ட்' தலைப்பில் ஏற்றுமதி வாய்ப்பு கருத்தரங்கு மதுரை வேளாண் உணவு வர்த்தக மையத்தில் நடந்தது. ஒய்.இ.,நிறுவனர் ரத்தினவேலு துவக்கி வைத்து பேசியதாவது: 2 டிரில்லியன் டாலர் அதாவது ரூ.180 லட்சம் கோடி மதிப்பில் ஏற்றுமதி இலக்கை பிரதமர் மோடி நிர்ணயித்துள்ளார்.
இதை 6 முதல் 7 ஆண்டுகளில் அடைய வேண்டும். ஏற்றுமதி வளர்ச்சிக்கு பல திட்டங்கள் உள்ளன என்றார்.
தலைவர் திருப்பதிராஜன் பேசியதாவது: ஏற்றுமதி இலக்கை அடைய ஏற்றுமதியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியுள்ளது.
ஏற்றுமதியின் நுணுக்கங்களை கற்றுக் கொள்ள வேண்டும். டிஜிட்டல் மீடியாக்களை பயன்படுத்தி பொருட்களின் விற்பனையை அதிகரிக்கலாம். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் நம்மை தேடி வருவர்.
தொழிற்சாலைகளில் பொருட்களின் தயாரிப்பை பார்வையிட்டு, ஏற்றுமதி செய்ய உதவுகிறோம் என்றார்.
துாத்துக்குடி 'புராம்ப்ட் டெர்மினல்' நிறுவன தலைவர் நடிகர் சரத்குமார் பேசியதாவது: எந்த தொழில் செய்தால் சிறப்பாக செயல்படலாம், எதற்கு விற்பனை வாய்ப்பு உள்ளது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். உண்மை, கடின உழைப்பு, உறுதி, நேர்மை இருந்தால் வெற்றியடையலாம்.
ஜி.டி.பி.,க்கு ஏற்றுமதி, இறக்குமதிதான் முதுகெலும்பு. அத்துறை தற்போது உச்சம் தொட்டு வருகிறது. இதற்கு மத்திய, மாநில அரசுகள் வாய்ப்புகளை உருவாக்கியுள்ளன.
வெற்றி, தோல்வியை சந்தித்தால்தான் அது பற்றிய புரிதல் ஏற்படும். தனி ஒருவருக்கு கடவுள் அதிக செல்வத்தை தரும்போது அதை பிறருக்கு பகிர்ந்தளிக்க வேண்டும். அதுபோல் தொழிலில் வெற்றியடைய பகிர்தல் அவசியம். இதனால் பலருக்கு வேலைவாய்ப்பு கிட்டும்.
நான் தோல்வியை கண்டு துவண்டுவிடுவதும் இல்லை. வெற்றியை கொண்டாடுவதும் இல்லை என்றார். தொழில் முனைவோர் பங்கேற்றனர். ஏற்றுமதியில் சாதனை படைத்தவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

