/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
'நல்ல புத்தகங்களை படித்தால் வெற்றி தேடி வரும்' 'இஸ்ரோ' முன்னாள் விஞ்ஞானி அறிவுரை
/
'நல்ல புத்தகங்களை படித்தால் வெற்றி தேடி வரும்' 'இஸ்ரோ' முன்னாள் விஞ்ஞானி அறிவுரை
'நல்ல புத்தகங்களை படித்தால் வெற்றி தேடி வரும்' 'இஸ்ரோ' முன்னாள் விஞ்ஞானி அறிவுரை
'நல்ல புத்தகங்களை படித்தால் வெற்றி தேடி வரும்' 'இஸ்ரோ' முன்னாள் விஞ்ஞானி அறிவுரை
ADDED : ஜன 22, 2025 09:07 AM

பெருங்குடி : 'நல்ல புத்தகங்களை தேடி படித்தால் வெற்றியும் உங்களைத் தேடி வரும்' என 'இஸ்ரோ' முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாத்துரை பேசினார்.
மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரி பட்டமளிப்பு விழாவுக்கு தலைவர் நாராயணன் தலைமை வகித்தார். முதல்வர் சந்திரன் முன்னிலை வகித்தார். மாணவர்களுக்கு 'இஸ்ரோ' விஞ்ஞானி மயில்சாமி அண்ணாத்துரை பட்டம் வழங்கினார்.
அவர் பேசியதாவது: மழை அனைவருக்கும் பொதுவாக பெய்கிறது. அதில் ஒரு துளி முத்தாக, ஒரு துளி உயிர் காக்கும் குடிநீராக மாறலாம். ஒவ்வொரு மழைத்துளிக்கும் ஒரு கொடுப்பினை உண்டு. அதுபோன்று உங்களின் ஒவ்வொரு செயல்பாடும் சிறந்த கொடுப்பினையை கொடுக்க வேண்டும். உங்கள் செயல்பாடுகளை உலகம் பாராட்டுவதன் மூலம் உங்கள் பெற்றோர் பூரிப்படைய வேண்டும்.
நாட்டின் வளர்ச்சி, உலக அமைதிக்கு உங்கள் பங்களிப்பு சிறப்பானதாக இருக்க வேண்டும். ஒவ்வொரு மணித்துளியிலும் நாடும், வீடும் சிறக்க பணியாற்ற வேண்டும். எண்ணம், சொல், செயலால் பயனுள்ள வாழ்க்கை வாழ வேண்டும். விரும்பியது கிடைப்பதே வெற்றி என பலரும் நினைக்கின்றனர். அடைந்தை விரும்பினாலும் வெற்றிதான்.
பட்டதாரிகளுக்கு வேலை இல்லை என்பது செய்தி. ஆனால் பல பணிகளுக்கு தகுதியான பட்டதாரிகள் இல்லை என்பதுதான் உண்மை. எனவே மாணவர்கள் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கேற்ப திறமையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
வாழ்நாள் முழுவதும் படித்துக் கொண்டே இருங்கள். நல்ல புத்தகங்களை தேடி படியுங்கள். வெற்றி உங்களைத் தேடி வரும் என்றார்.