தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/வெற்றிப் பயணத்தால் வாழ்வாதாரம் பாதிப்பு: ஆட்டோ டிரைவர்கள் மனு

வெற்றிப் பயணத்தால் வாழ்வாதாரம் பாதிப்பு: ஆட்டோ டிரைவர்கள் மனு

வெற்றிப் பயணத்தால் வாழ்வாதாரம் பாதிப்பு: ஆட்டோ டிரைவர்கள் மனு


UPDATED : அக் 12, 2026 06:02 PM

ADDED : அக் 12, 2026 05:58 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 12, 2026 06:02 PM ADDED : அக் 12, 2026 05:58 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: ‘‘தங்கள் வாழ்வாதாரம் பாதித்துள்ளதால் பெண்களுக்கான இலவச பயணம் குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும்’’ என குறைதீர் கூட்டத்தில் ஆட்டோ டிரைவர்கள் மனு கொடுத்தனர்.

மதுரை மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா தலைமையில் நடந்தது. டி.ஆர்.ஓ., அன்பழகன், சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர் பொன்ராஜ், டி.எஸ்.ஓ., ராஜகுரு உட்பட பலர் பங்கேற்றனர்.

அய்யனார் கோவில் அணை விவசாய பாசன சங்க செயலாளர் வினோத்குமார் அளித்த மனு: அரசின் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர் சேர்க்கைக்கு ரூ.150 க்கு பதிலாக ரூ.1000 கட்டாயப்படுத்தி வசூலிப்பதை நிறுத்த வேண்டும். மேலும் ஏ கிரேடு உறுப்பினர்களை உடனடியாக சேர்க்க வேண்டும். சேடப்பட்டி ஒன்றியம் மல்லப்புரம் ஊராட்சியில் மலையடிவாரம் நாய்களின் பெருக்கம் கட்டுக்கடங்காமல் உள்ளது. முறையாக பராமரிக்காத நாய்களால் வெறிநாய்க்கடி சம்பவங்கள் நடக்கின்றன. எனவே நாய்கள் பெருக்கத்தை கட்டுப்படுத்த மல்லப்புரம் கால்நடை மருத்துவமனையில் கருத்தடை மையத்தை ஏற்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

அழகர்கோவில் கோட்டைவாசல் ஆட்டோ ஓட்டுனர்கள் நலச்சங்கத்தினர் அளித்த மனு: அரசு அறிவித்துள்ள வெற்றிப் பயணம் திட்டத்தின் செயல்பாடுகள், விரிவாக்கம் காரணமாக பஸ் வழித்தடம் அருகில் உள்ள பகுதிகளில் இயங்கும் ஆட்டோ ஓட்டுனர்களின் வாழ்வாதாரம் பாதித்துள்ளது. எனவே அரசாணையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

தமுக்கம் பகுதி ஆட்டோ ஓட்டுனர்கள் சங்க நிர்வாகி விவேகானந்தன் கூறுகையில், ‘‘பெண்களுக்கு முழு இலவச பயணத்தால் ஆட்டோ உட்பட பலரது வாழ்வாதாரம் பாதித்துள்ளது. பண்டிகை காலத்தில் விலைவாசி உயர்ந்துள்ள நிலையில் எங்களுக்கும் பணி வாய்ப்பில்லை. வீடுகளில் பெண்கள் ஜவுளிக்கடைகளில் நாள்முழுக்க பணியாற்றினாலும் ரூ.300 தான் சம்பளமாக வழங்குகின்றனர். இதற்கு தீர்வு கிடைக்கவில்லை எனில் அடுத்த கட்டமாக கூட்டமைப்பினர் சேர்ந்து ஆலோசிப்போம்’’ என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us