நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்: பேரையூர் தாலுகாவில் கிராம நிர்வாக அலுவலகம் (வி.ஏ.ஓ.,) இல்லாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
இத்தாலுகாவில் 75 கிராமங்கள் உள்ளன. இதில் பேரையூர் பிட்2., கெஞ்சம்பட்டி, சிலார்பட்டி, சிட்டுலொட்டி, மத்தகரை உள்ளிட்ட பல கிராமங்களில் கிராம நிர்வாக அலுவலர் கட்டடம் இல்லாததால் வி.ஏ.ஓ.,க்கள் சிரமப்படுகின்றனர்.
ஆங்காங்கே இருக்கிற மற்ற கிராம நிர்வாக அலுவலகங்களில் பணியாற்றுகின்றனர். பொதுமக்கள் நீண்ட துாரம் செல்ல வேண்டிய நிலை உள்ளது.பல அலுவலகங்கள் இடியும் அபாயத்தில் உள்ளன.இருக்கும் அலுவலகங்களில் கழிப்பிட வசதி இல்லை. அலுவலகங்களை கட்டுவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.