ADDED : அக் 19, 2025 10:18 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்: பேரையூர் பகுதி மக்காச்சோள வயல்களில் தேங்கிய மழை நீரை விவசாயிகள் வெளியேற்றி வருகின்றனர்.
பேரையூர் சுற்றுப்புற பகுதிகளில் பருவ மழையை எதிர்பார்த்து ஆடிப்பட்டத்தில் மக்காச்சோளம் விதைத்தனர். போதுமான மழையின்றி மக்காச்சோள பயிர்கள் கருகின. இதனால் கடந்த மாதம் விவசாயிகள் மக்காச்சோளத்தை மறு விதைப்பு செய்தனர்.
தற்போது மக்காச்சோள பயிர் முளைக்க துவங்கியுள்ளது. ஒரு வாரமாக தொடர்ந்து மழை பெய்ததால் வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. தண்ணீர் தேங்கினால் மக்காச்சோள பயிர் களின் வளர்ச்சிபாதிக்கும். தண்ணீரில் மூழ்கிய மக்காச்சோள பயிரை காப்பாற்ற வயல்களில் தேங்கிய மழை நீரை வெளியேற்றும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.