ADDED : அக் 31, 2024 02:39 AM

திருமங்கலம்: திருமங்கலம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் சில மாதங்களாக சாக்கடை கால்வாய் அடைத்து கழிவுநீர் செல்ல இயலாத சூழ்நிலை இருந்தது. இந்நிலையில் ஒரு பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாக்கடை கழிவுகளை அகற்றினர்.
முப்பது ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட சிறிய அளவிலான சாக்கடையை கால்வாயை அகற்றி பெரிய பைப்பை மதுரை ரோட்டில் பதித்தனர்.
இதனால் தண்ணீர் முழுவதுமாக சென்று வந்தது. மற்றொரு பக்கத்தில் அடைப்புகள் அகற்றப்படவில்லை.
தண்ணீர் செல்ல உரிய வசதியும் செய்யப்படவில்லை.
அந்தப் பகுதி ஓட்டல்கள், கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுப் பொருட்களை கழிவுநீர் கால்வாயில் வீசுவதால் கழிவுநீர் செல்ல வழியின்றி உள்ளது.
பி.கே.என்., ஆண்கள் பள்ளி எதிரே ரோடு முழுவதும் கழிவுநீர் தேங்கி உள்ளதால், அந்தப் பகுதியை கடந்து செல்வோர் அவதிக்கு உள்ளாகின்றனர்.
கழிவு நீர் தேங்குவதால் கொசு உற்பத்தி மையமாக மாறி உள்ளது.
நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கழிவுநீர் அடைப்புக்கு காரணமானோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.