/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வங்கி கணக்கில் வரவு ரூ. 35 கையில் கிடைப்பதோ ரூ.19 கரும்பு விவசாயிகள் குமுறல்
/
வங்கி கணக்கில் வரவு ரூ. 35 கையில் கிடைப்பதோ ரூ.19 கரும்பு விவசாயிகள் குமுறல்
வங்கி கணக்கில் வரவு ரூ. 35 கையில் கிடைப்பதோ ரூ.19 கரும்பு விவசாயிகள் குமுறல்
வங்கி கணக்கில் வரவு ரூ. 35 கையில் கிடைப்பதோ ரூ.19 கரும்பு விவசாயிகள் குமுறல்
ADDED : ஜன 07, 2025 05:12 AM

மேலுார்: பொங்கல் பரிசு தொகுப்புக்காக விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் கரும்புகளை, அரசு நிர்ணயித்த விலையை விட குறைந்த விலைக்கு தரகர்கள் வாங்குவதால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.
பொங்கல் பரிசு தொகுப்பில் முழுக் கரும்பை கொள்முதல் செய்யவும், அவற்றை வெட்டி, லாரிகளில் ஏற்றி, கடைகளுக்கு கொண்டு செல்ல ரூ.35 எனவும் செலவு தொகையை நிர்ணயம் செய்துள்ளது.
இவ்வாறு வாங்கும் கரும்புகளை மேலுாரில் 172 ரேஷன் கடைகளில் உள்ள 92 ஆயிரம் கார்டுதாரருக்கு வழங்க உள்ளனர்.இக்கரும்புகளை விவசாயிகளிடம் நேரடியாக வாங்குவதற்கு அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் மேலுாரில் இடைத்தரகர்கள் விவசாயிகளிடம் குறைந்த விலையில் விலைக்கு வாங்கி வருகின்றனர்.
விவசாயி வீரணன்: ஒரு முழு கரும்பின் விலையை அரசு ரூ. 35 விலை என நிர்ணயம் செய்துள்ள நிலையில், இடைத்தரகர்கள் கரும்பை ரூ. 13, ஏற்று, இறக்கு கூலிக்கு ரூ.6 எனவும் லாரி வாடகை நீங்கலாக ரூ.19 கொடுக்கின்றனர். ஆனால் வங்கிக் கணக்கில் ரூ. 35க்கு பணம் வரவு வைக்கப்பட்டதும், விவசாயிகளிடம் மீதித்தொகையை பெறுவதற்கு ஒவ்வொரு கிராமத்திலும் இடைத்தரகர்கள் தங்களுக்கான ஆட்களை நியமித்து உள்ளனர். அதனால் விவசாயிகள் செய்வதறியாது திகைக்கின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. அதிகாரிகள் நேரடியாக விவசாயிகளிடம் அரசு நிர்ணயித்த விலையில் கொள்முதல் செய்ய வேண்டும் என்றார்.
கூட்டுறவுத்துறை இணைப் பதிவாளர் சதீஷ்குமார் கூறுகையில்,
''விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

