ADDED : நவ 28, 2024 05:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: தமிழ்நாடு கரும்பு விவசாய சங்கம் சார்பில் மேலுாரில் ஆர்ப்பாட்டம் நடத்தது. பஸ்ஸ்டாண்ட் பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணை தலைவர் பழனிச்சாமி தலைமை வகித்தார்.
செயலாளர் இளங்கோவன் முன்னிலை வகித்தார். அலங்காநல்லுார் சக்கரை ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கரும்பு பதிவுக்கு பீல்டு மேன்கள், அதிகாரிகளை நியமிக்க வேண்டும். அரசு நியமித்த கமிட்டி சிபாரிசு செய்த ரூ.27 கோடி நிதி ஒதுக்காத தி.மு.க., அரசை கண்டிப்பதாக கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் கதிரேசன், மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் கண்ணன், தனசேகரன் சி.ஐ.டி.யு., தாலுகா தலைவர் மணவாளன், நிர்வாகிகள் மணி, போஸ், கிருஷ்ணமுர்த்தி, முருகன் உட்பட விவசாயிகள் பலர் பங்கேற்றனர்.