ADDED : அக் 22, 2024 05:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை வழக்கறிஞர் செல்வகுமார். உயர்நீதிமன்ற மதுரைகிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:
மதுரை மானகிரியில் (வார்டு 33) குறிப்பிட்ட சர்வே எண்ணில் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. அதை சிலர் ஆக்கிரமித்து மாடுகளை கட்டி வைத்து, குப்பையை குவிக்கின்றனர். சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.
ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். அங்கு ஆங்கிலவழி கல்விக்கு அரசு துவக்கப் பள்ளி அமைக்க நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு கலெக்டர், மாநகராட்சி கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.