நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை காந்தி மியூசியத்தில் நடக்கும் கோடை பயிற்சி முகாமை மாவட்ட சுற்றுலா அலுவலர் ஸ்ரீபாலமுருகன் தொடங்கி வைத்தார். மியூசிய செயலாளர் நந்தாராவ் தலைமை வகித்தார். கல்வி அலுவலர் நடராஜன், ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ் கலந்து கொண்டனர்.
முகாமில் மாணவர்களுக்கு பொது அறிவு பயிற்சி, தமிழ் எழுதுதல்,வாசித்தல் பயிற்சி, மேடைப்பேச்சு பயிற்சி, தகவல் தொடர்பு, ஹிந்தி பயிற்சி, காந்திய சிந்தனை, நன்னெறி கல்வி கற்றுத்தரப்படுகிறது. முகாம் மே 30 வரை நடக்கிறது.

