sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

சண்டே ஸ்பெஷல்/பிரியா வாரியர்

/

சண்டே ஸ்பெஷல்/பிரியா வாரியர்

சண்டே ஸ்பெஷல்/பிரியா வாரியர்

சண்டே ஸ்பெஷல்/பிரியா வாரியர்


ADDED : ஏப் 20, 2025 04:27 AM

Google News

ADDED : ஏப் 20, 2025 04:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழில் நீங்கள் நிறைய படங்கள் நடிக்கவில்லையே. எப்படி ஒரு படத்தை தேர்வு செய்றீங்க.

கதை, இயக்குனர், தயாரிப்பு நிறுவனம் என்று எல்லாமே நான் பார்க்கிறேன். 'குட் பேட் அக்லி' படத்தில் எல்லாமே இருந்தது. இப்படி 'பேக்கேஜா' ஒரு படம் கிடைக்கிறது ரொம்ப கஷ்டம். 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' படம் கூட ரொம்ப எமோஷனல் படம் தான்.

 படத்தோட கதை சொல்லும்போது சின்ன எதிர்மறை கதாபாத்திரத்தில் நீங்கள் இருப்பீங்கன்னு முன்னாடியே சொன்னாங்களா.

கதை சொல்லும்போது எனக்கு நெகட்டிவ் ரோல் என்று சொல்லல. வில்லனோட கேர்ள் பிரண்ட் தான்னு சொன்னாங்க. படம் பார்த்த பிறகு தெரிஞ்சது, அந்த பொண்ணுக்கு பாய் ப்ரெண்ட் மேல இருக்கிற லவ்வுனால இப்படி ஒரு விஷயம் பண்றான்னு.

 படத்துல ஒரு சீன்ல உங்களை உயரமான சுவரில் இருந்து தொங்க விடுற மாதிரி காட்சிகள் எல்லாம் இருந்தது. அந்த காட்சி படமாக்கும் போது நிஜமா பயந்தீங்களா.

ரொம்பவே பயந்தேன். ஏன்னா உயரம் பார்த்தலே எனக்கு பயம் வரும். சண்டைக் காட்சிகள் இதுவரை செய்தது கிடையாது. எனக்கு இந்த படம் எல்லாமே புதுசா இருந்தது. ஸ்பெயின்ல தான் படப்பிடிப்பு நடந்தது. பாதுகாப்பிற்காக கீழே பெட் எல்லாம் போட்டு இருந்தாங்க. என்றாலும் டென்ஷனாக இருந்தது.

 அஜித், திரிஷா, சிம்ரன் இப்படி ஒரு பெரிய டீம் கூட வேலை பார்த்திருக்கீங்க. இவங்க எல்லார்கிட்டயும் நீங்க என்ன கற்றுக்கொண்டீர்கள்.

எல்லோரும் சகஜமா அன்பாக பழகினாங்க. எல்லாருமே எல்லாரையும் சரிசமமா நடத்துனாங்க. அது எனக்கு ரொம்ப பிடித்து இருந்தது. அஜித் பெரிய நடிகர். ஆனால் அவருக்குள்ள ஒரு குழந்தைத்தனம் இருக்கும். பழகும்போது சின்ன குழந்தை போல பேசுவார். அவங்களுக்கு பிடித்த விஷயங்களை பேசும் போது அவரோட கண்ணுல, சிரிப்புல அத நம்ம பார்க்க முடியும். அவர் எவ்வளவு உண்மையா இருக்கார் என்று நம்மளால தெரிஞ்சுக்க முடியும். எங்கள் இருவருக்கும் பெரிய காம்பினேஷன் படத்துல இல்ல. அதனால் இருவருக்கும் குறைவான நாட்கள் தான் படப்பிடிப்பு இருந்தது. கடைசி நாள் தான் அவரோடு புகைப்படம் எடுத்தேன்.

 அஜித் படத்தில் சிறிய ரோல் என்று வருத்தம் இருந்ததா.

பெரிய நடிகர்களோட படத்தில் நடித்தால் 99 சதவீதம் அந்த நடிகருக்கு தான் பெரிய இடம் இருக்கும் என்பது எல்லாருக்கும் தெரியும். இந்த படத்தின் இயக்குனர் ஆதிக் திட்டமிட்டு நன்றாக கதை எழுதியுள்ளார். எல்லாருக்கும் குறைந்த சீன் இருந்தாலும் அதில் அவர்கள் திறமையை காட்டும் அளவு இருந்தது.

 நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தில் தனுஷ் ஒரு இயக்குனர். அவரை எப்படி பார்த்தீங்க.

குறைந்த நாட்கள் தான் நடித்தேன். வேகமாக படப்பிடிப்பு நடத்தினோம். ஒரு நாளைக்கு 5 சீன்ஸ் கூட எடுப்பாங்க. இதுக்கு காரணம் தனுஷ் தான். அவருடைய ஒழுக்கம் பிடித்தது. இந்த காட்சிக்கு இவ்வளவு போதும் என்பதில் தெளிவாக இருந்து திட்டமிட்டு படப்பிடிப்பு நடத்தினார்.

 பல மொழி படங்களில் நடிப்பது எப்படி சாத்தியமாகிறது.

தமிழ், மலையாளம், ஹிந்தி ரொம்ப வசதியா இருக்கிறது. பேச முடியும், புரிந்து கொள்ள முடியும். தெலுங்கு, கன்னடம் எனக்கு கொஞ்சம் தடுமாற்றம் தான். சரியா புரியல. என் அம்மா கோயம்புத்துார்; அப்பா மும்பை. அதனால் எனக்கு ஹிந்தி, தமிழ் நன்றாக வரும். மற்ற மொழிகளில் தடுமாறுவேன்.

 படவாய்ப்பு கிடைக்கிறதுக்கு நிறைய விட்டுக் கொடுத்து போகணுமா.

நமது நோக்கம் என்ன; எதுக்கு இங்க வந்திருக்கோம் அப்டின்னு நினைக்கணும். சரியான நேரத்தில் சரியான வாய்ப்பு கிடைக்கும். நாம் எதிலும் சரியாக இருக்க வேண்டும்; அவ்ளோதான்!

 உங்கள் நிஜ வாழ்கையில் காதல்.

கண்டிப்பா லவ் செய்திருக்கிறேன். சீசன் மாறுவது மாதிரி காதலும் சில டைம் மாறி இருக்கு. என்ன பண்றது.. என் பலவீனமே அன்பு தான். எனக்கு அன்பு செலுத்துவதிலும் பிரச்னை. அன்பு பெறுவதிலும் பிரச்னை.

 பெண்களுக்கு இந்த சமூகத்தில் இன்னும் என்ன கிடைக்க வேண்டும் என நினைக்கிறீங்க.

நான் கொச்சியில் தனியே போய் சாப்பிடுவேன். அந்த வாழ்க்கைய மிஸ் செய்யக்கூடாது என்று நினைப்பேன். பெண்களுக்கு பாதுகாப்பு ரொம்ப முக்கியம். நமக்கான உரிமைகள் நமக்கு கிடைக்கணும்!






      Dinamalar
      Follow us