/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வாக்குறுதிகள் நிறைவேற்றினால் ஆதரவு
/
வாக்குறுதிகள் நிறைவேற்றினால் ஆதரவு
ADDED : ஜன 24, 2024 05:04 AM
மதுரை 'லோக்சபா தேர்தலில் எஸ்.சி., எஸ்.டி. ஓ.பி.சி., டி.என்.டி., மக்களின் குறைந்தபட்ச கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளிக்கும் கட்சிக்கு ஆதரவு அளிப்போம். அதற்கான மக்கள் பிரசார இயக்கம் துவங்கப்பட்டுள்ளது' என சமூக நீதி கூட்டமைப்பு நிர்வாகிகள் தெரிவித்தனர்.
மதுரையில் நிர்வாகிகள் துரை மணி உள்ளிட்டோர் கூறியதாவது: தேர்தலில் எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., டி.என்.டி., மக்கள் தனித்தனியாக பிரிந்து ஓட்டளிப்பதால் உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றன. அரசியல் அமைப்பு சட்டப்படியான உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் வாழ்கின்றனர். எனவே லோக்சபா தேர்தலில் இப்பிரிவு மக்கள் ஒருங்கிணைந்து ஓட்டளிக்க வேண்டும். எந்த கட்சி இப்பிரிவு மக்களின் குறைந்தபட்ச கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளிக்கிறதோ அக்கட்சிக்கு ஆதரவு அளிப்போம் என்றனர்.

