/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மலேசியாவில் இறந்தவரின் உடல் அடக்கம் உயர்நீதிமன்றம் உத்தரவு
/
மலேசியாவில் இறந்தவரின் உடல் அடக்கம் உயர்நீதிமன்றம் உத்தரவு
மலேசியாவில் இறந்தவரின் உடல் அடக்கம் உயர்நீதிமன்றம் உத்தரவு
மலேசியாவில் இறந்தவரின் உடல் அடக்கம் உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : பிப் 15, 2025 04:58 AM
மதுரை: ராமநாதபுரம் மாவட்டம் புதுவலசையை சேர்ந்தவர் மலேசியாவிற்கு வேலைக்கு சென்றதில் இறந்ததால் அங்கு அடக்கம் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
புதுவலசை ஹாஜிரா பானு தாக்கல் செய்த மனு: எனது கணவர் முகமது சலீம் ராவுத்தர் (எ) அகமது இப்ராகிம். மலேசியாவில் வேலை செய்தார். 2024 டிச.,16 ல் இறந்து விட்டதாக ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் மூலம் தகவல் கிடைத்தது.
மலேசியாவில் பாதுகாக்கப்படும் உடலை அடக்கம் செய்யவில்லை. கணவரின் பெயர் அகமது இப்ராகிம் என ஆதார் அட்டையிலும், முகமது சலீம் ராவுத்தர் என பாஸ்போட்டிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் மேல்நடவடிக்கையை தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டது. இரு பெயர்களும் ஒன்றுதான் என கலெக்டரிடம் ஒப்புதல் கடிதம் அளித்தேன்.
உடலை மலேசியாவில் அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க மத்திய வெளியுறவுத்துறை செயலர், சென்னையிலுள்ள அயலகத் தமிழர்கள் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை கமிஷனருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதி வி.லட்சுமிநாராயணன்: மனுதாரரின் கணவர்தான் இறந்துள்ளார். அடையாளத்தில் எந்த சர்ச்சையும் இல்லை. மலேசியாவிலேயே உரிய நடைமுறைகளை பின்பற்றி உடல் அடக்கம் செய்யப்படும் என தமிழக அரசு தரப்பு தெரிவித்தது. அங்குள்ள இந்திய துணைத் துாதரகத்தை தொடர்புகொண்டு உடலை அடக்கம் செய்வது உறுதி செய்யப்படும் என மத்திய அரசு தரப்பு தெரிவித்தது. இதை இந்நீதிமன்றம் பதிவு செய்கிறது. விரைவில் அடக்கம் செய்வதை உறுதி செய்ய உடனடி நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டார்.