/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இளைஞர்கள் முயற்சியால் கண்காணிப்பு கேமராக்கள்
/
இளைஞர்கள் முயற்சியால் கண்காணிப்பு கேமராக்கள்
ADDED : டிச 16, 2024 04:47 AM
உசிலம்பட்டி : மதுரை மாவட்டம் உசிலம்பட்டிக்கும் தேனி மாவட்டம் ஆண்டிபட்டிக்கும் இடையில் கணவாய் மலையடிவாரத்தில் செட்டியபட்டி கிராமம் உள்ளது. 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலையில் கணவாய் மலையின் இறக்கத்தில் உள்ளதால் வேகமாக வரும் வாகனங்களால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது.
இந்த பகுதியில் விபத்துகளை தவிர்க்கவும், குற்ற சம்பவங்களை குறைக்கவும் கிராம இளைஞர்கள் போலீசார்களுடன் இணைந்து சிசிடிவி கேமராக்களை பொருத்தியுள்ளனர். அடிக்கடி விபத்து நடைபெறும் பகுதியான பஸ் நிறுத்தம், அரசு பள்ளி உள்ளிட்ட 11 இடங்களில் இவற்றை நிறுவியுள்ளனர்.
தாலுகா போலீஸ் எஸ்.ஐ., க்கள் சேகர், பால்ராஜ் மற்றும் போலீசார், கிராமத்து இளைஞர்கள் இணைந்து கேமராக்களை நேற்று செயல்பாட்டுக்கு கொண்டு வந்தனர்.

