/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
லஞ்சம் வாங்கிய சர்வேயர் கணவருடன் கைது
/
லஞ்சம் வாங்கிய சர்வேயர் கணவருடன் கைது
ADDED : நவ 30, 2024 05:40 AM

திருமங்கலம்: மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நிலத்தை அளந்து கொடுக்க கணவரை வைத்து லஞ்சம் வாங்கிய சர்வேயர் சித்ராதேவி கணவருடன் கைது செய்யப்பட்டார்.
திருமங்கலம் கீழ உரப்பனூரைச் சேர்ந்தவர் அஜித்குமார் 30. இவர்களுக்கு சொந்தமான இடத்தை அளக்க திருமங்கலம் அருகே உள்ள கொக்குளம் பீர்க்கா சர்வேயர் சித்ராதேவியை அணுகினார். ஆனால் நிலத்தை அளக்க ரூ. 5 ஆயிரம் லஞ்சமாக சித்ராதேவி கேட்டார். மேலும் லஞ்ச பணத்தை கணவர் கணேசனிடம் கொடுக்கும்படி அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து அஜித்குமார் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். போலீசார் கொடுத்த ரசாயன பொடி தடவிய நோட்டுகளை மேலக்கோட்டையில் வைத்து அஜித்குமார் கணேசனிடம் கொடுத்தார். அப்போது மறைந்திருந்த போலீசார் அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். அதே நேரத்தில் திருமங்கலம் தாலுகா அலுவலகத்தில் இருந்த சித்ராதேவியையும் போலீசார் விசாரித்து கைது செய்தனர்.

