/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சர்வேயர்கள் காத்திருப்பு போராட்டம்
/
சர்வேயர்கள் காத்திருப்பு போராட்டம்
ADDED : டிச 10, 2024 05:30 AM

மதுரை: தமிழ்நாடு அளவை அலுவலர்கள் (சர்வேயர்) ஒன்றிப்பு சார்பில் மதுரை மாவட்டத்தில் உள்ள 11 தாலுகா அலுவலகங்களிலும் நேற்று காத்திருப்பு போராட்டம் நடந்தது.
களப்பணியாளர்கள் செய்யும் பணிகளை கணக்கில் கொண்டு ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மனித திறனுக்கு ஏற்ற குறியீடுகளை வரையறுக்க வேண்டும்.
உதவி, கூடுதல் இயக்குனர் பணிகள், கடமைகளை, மண்டல துணை, இணை, இயக்குனர்களுக்கு மாற்றுவது கூடாது. ஆய்வாளர், துணை ஆய்வாளர் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்.
சிறப்பு திட்டங்களில் நில எடுப்பு பணிகளுக்காக ஒதுக்கிய பணியிடங்களில் நிலஅளவைக் களப்பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் உட்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில அளவில் இந்த போராட்டம் நடந்தது.
மதுரை மாவட்ட தலைவர் ராஜ்குமார், செயலாளர் ரகுபதி, பொருளாளர் மணிகண்டன், துணைத் தலைவர் பாலகிருஷ்ணன், இணைச் செயலாளர் திவ்யா உட்பட பலர் பங்கேற்றனர். நிர்வாகிகள் கூறுகையில், ''அரசு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அடுத்து டிச.19 ல் ஒருநாள் தற்செயல் விடுப்பு போராட்டம், வரும் ஜன.22, 23ல் 48 மணி நேர வேலை நிறுத்தம் செய்ய உள்ளோம்'' என்றனர்.
திருமங்கலம்
தாலுகா அலுவலக சர்வேயர் பிரிவு அலுவலர்கள் நேற்று ஒரு நாள் அடையாள தற்செயல் விடுப்பு எடுத்து அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.