/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கால்வாய் ஆக்கிரமிப்பால் வெள்ளக்காடான சூர்யா நகர் பகுதி
/
கால்வாய் ஆக்கிரமிப்பால் வெள்ளக்காடான சூர்யா நகர் பகுதி
கால்வாய் ஆக்கிரமிப்பால் வெள்ளக்காடான சூர்யா நகர் பகுதி
கால்வாய் ஆக்கிரமிப்பால் வெள்ளக்காடான சூர்யா நகர் பகுதி
ADDED : அக் 27, 2024 03:44 AM

புதுார் : மதுரை மாநகராட்சி சூர்யா நகர் வார்டு 8 க்குட்பட்ட மீனாட்சி அம்மன் நகர் பஞ்சவர்ணம் கார்டன் குடியிருப்புவாசிகள் கனமழையால் 10 நாட்களாக தண்ணீரில் தத்தளிக்கின்றனர்.
அவர்கள் கூறியதாவது:முன்பு அருகில் உள்ள சிறுதுார் கண்மாயில் நீர் நிரம்பினால் அடுத்தடுத்த கண்மாய்களுக்கு நீர் தடையின்றி செல்லும். வீடுகளின் பெருக்கத்தால் நீர் வழித்தடம் தடைபட்டு குடியிருப்புப் பகுதிகளில் தேங்குகிறது. அரை மணி நேரம் மழை பெய்தாலும் தண்ணீர் தேங்கிவிடும். தற்போது தொடர் மழையால் முழங்கால் அளவு தண்ணீர் வீட்டிற்குள் வந்தது. 12 ஆண்டுகளாகியும் பாதாள சாக்கடை வசதி, வடிகால் வசதி இல்லை. டெண்டர் விடப்பட்டதாக சொல்கின்றனர்.
ஆனால் பணிகள் துவங்கவில்லை. கூட்டுக் குடிநீருக்கான குழாய் பதிக்கும் பணிகள் முடிந்தாலும் தண்ணீர் வழங்கவில்லை. மழைநீர் பல நாட்களாக தேங்கி நிற்பதால் நிலத்தடி நீரும் மாசடைந்து வருகிறது.தேங்கியுள்ள நீரிலிருந்து பாம்புகள் அதிகளவில் வீட்டிற்குள் புகுகின்றன. இதனால் தினமும் அச்சத்துடன் துாக்கமின்றி தவிக்கிறோம் என்றனர்.
சூர்யா நகர் குடியிருப்போர் நலச்சங்கத் தலைவர் ஆண்டி கூறியதாவது: இம்முறை அதிகளவு மழைப் பொழிவால் இப்பகுதியிலுள்ள பறையாத்திக்குளம் கண்மாய் நிரம்பியது. பல நாட்களாக வரத்து இல்லாத காரணத்தால் மறுகால் பாயும் கால்வாய் புதர்மண்டி கிடந்தது. கட்டட ஆக்கிரமிப்பால் 40 மீ., அகலம் கொண்ட கால்வாய் 10 மீ., ஆக சுருங்கியது. இதனால் தண்ணீர் செல்ல முடியாமல் வார்டு 8 பகுதிகளான சூர்யா நகர், மீனாட்சி அம்மன் நகர் பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டது.
அமைச்சர் மூர்த்தி, தளபதி எம்.எல்.ஏ., கலெக்டர் சங்கீதா ஆகியோர் நேற்று (அக். 25) இரவு ஆய்வு மேற்கொண்டு கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற உத்தரவிட்டனர். அதன் காரணமாக கால்வாய் துார்வாரப்பட்டு தண்ணீர் தற்போது மறுகால் பாய்ந்து வருகிறது. இதனால் மீனாட்சியம்மன் நகர், சூர்யா நகர் பகுதிகளில் தேங்கியுள்ள தண்ணீர் வடிந்து வருகிறது. ஆனால் கட்டட ஆக்கிரமிப்புகள் 10 வது வார்டுக்குள் வருகிறது. எனவே தாசில்தார்,கவுன்சிலர்கள், போலீசார் உதவியுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.