/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஞானக்குழந்தை சூரிய நாராயணன் அன்னதானம் வழங்கினார்
/
ஞானக்குழந்தை சூரிய நாராயணன் அன்னதானம் வழங்கினார்
ADDED : ஆக 08, 2024 09:52 AM

சாலையோர வாசிகளுக்கும் உணவு வழங்கி வரும் மதுரை அட்சய பாத்திரம் டிரஸ்ட்டுக்கு குவியும் பாராட்டுகள்
மதுரை அட்சய பாத்திரம் டிரஸ்ட் சார்பில் கொரோனா நோய்தொற்று ஆரம்பித்த நாளிலிருந்து சாலையோர வாசிகள் மற்றும் வறியோருக்கு, இயலாதோருக்கு மதுரையின் அட்சயபாத்திரம் டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு தினமும் உணவு வழங்கி வருகிறார்.
தினமும் பசியால் வாடி நிற்கும் சாலையோர வாசிகளை கண்ட இவர் கொரோனா தொற்று முற்றிலும் குறைந்த நிலையிலும் தினமும் உணவு வழங்கின்றார். இன்றுடன்
1189 வது நாளாக இன்று பூங்கா முருகன் கோவில் அருகே உள்ள சாலையோ வாசிகளுக்கும், மதுரை ராஜாஜி மருத்துவமனை ஒருங்கிணைந்த குழந்தைகள் நல பிரிவின் அருகே நோயாளிகளின் உறவினர்களுக்கும் மதுரை அட்சய பாத்திரம் டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு மதிய உணவினை வழங்கினார். அவருடன் ஞானக் குழந்தை என்ற பட்டம் பெற்ற 10வயது சிறுவன் சூரியநாராணனும் வழங்கினார்.
சிறுவன் சூரிய நாராயணன் கூறும்போது மதுரையில் நிகழ்ச்சி ஒன்றிற்கு வந்தேன். இங்கு மதிய உணவு வழங்கி வரும் நெல்லை பாலு அங்கிளை பார்த்தேன் அவர் மதுரையின் அட்சய பாத்திரம் மூலம் வறியவர்களுக்கும், மனநலம் பாதித்தவர்களுக்கும் சாலையோர வாசிகளுக்கும் தொடர்ச்சியாக 1189நாட்களுக்கும் மேலாக மதிய உணவு வழங்கி வருகிறார். அவருக்கு பாராட்டுகள். அவருடன் இணைந்து இன்று மதிய உணவு வழங்கினேன். நீங்களும் இந்த அட்சய பாத்திரம் நிறுவனம் தொடர்ந்து உணவு தானம் நல உதவிகள் வழங்கிட உதவ வேண்டும் என்றார்.