ADDED : டிச 15, 2025 05:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் அருகே புதுப்பட்டி சபரிபாலன் ஐயப்பன் கோயிலில் பாலமுருகன், பெரிய கருப்பண்ண சுவாமி, சின்ன கருப்பண்ண சுவாமி சிலைகள் பிரதிஷ்டை விழா நடந்தது. நேற்று முன்தினம் யாகசாலை பூஜை கணபதி ஹோமத்துடன் துவங்கின. நேற்று காலை பிரதிஷ்டை செய்யப்பட்ட சுவாமி சிலைகளுக்கு புனிதநீர் ஊற்றி அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன.
சிறப்பு அலங்காரத்தை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. டிச.,28ல் தவமணி தங்க ராக்காயி குழு சார்பில் கன்னி பூஜை, விளக்கு பூஜை, அன்னதானம் நடக்கிறது. ஏற்பாடுகளை குருநாதர்கள் அம்பிகாபதி, இந்திரன், கோயில் நிர்வாகக் குழுவினர் செய்திருந்தனர்.

