/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
1.20 லட்சம் வழக்குகளில் தீர்ப்பளித்த சுவாமிநாதன்
/
1.20 லட்சம் வழக்குகளில் தீர்ப்பளித்த சுவாமிநாதன்
1.20 லட்சம் வழக்குகளில் தீர்ப்பளித்த சுவாமிநாதன்
1.20 லட்சம் வழக்குகளில் தீர்ப்பளித்த சுவாமிநாதன்
ADDED : டிச 11, 2025 05:16 AM
மதுரை: மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.,சுவாமிநாதன் 9 ஆண்டுகளில் 1.20 லட்சம் வழக்குகளில் தீர்ப்புகளை வழங்கியுள்ளார்.
சென்னை உயர்நீதி மன்றம் மதுரை கிளையில் பணியாற்றும் சுவாமிநாதன் 2017 முதல் 2025 வரை வழங்கிய தீர்ப்புகள் தற்போது வைரலாகி வருகிறது.
அதன்படி 2017 ல் அவர் 7090 வழக்குகளுக்கு தீர்ப்பளித்துள்ளார். 2018 ல் 20 ஆயிரத்து 253, 2019 ல் 16 ஆயிரத்து 394 வழக்குகளுக்கும், 2020 ல் 12 ஆயிரத்து 470 வழக்குகள், 2021 ல் 9,463 வழக்குகள், 2022 ல் 12 ஆயிரத்து 393 வழக்குகள், 2023 ல் 17 ஆயிரத்து 429 வழக்குகள், 2024 ல் 12 ஆயிரத்து 926 வழக்குகள், 2025 ல் ஜனவரி முதல் நவம்பர் வரை 12 ஆயிரத்து 8 வழக்குகள் என, மொத்தம் 9 ஆண்டுகளிலும் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 426 வழக்குகளில் தீர்ப்பு வழங்கியுள்ளார்.