/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
போட்டிகளுக்கு தயாராகும் கிடாக்களுக்கு நீச்சல் பயிற்சி
/
போட்டிகளுக்கு தயாராகும் கிடாக்களுக்கு நீச்சல் பயிற்சி
போட்டிகளுக்கு தயாராகும் கிடாக்களுக்கு நீச்சல் பயிற்சி
போட்டிகளுக்கு தயாராகும் கிடாக்களுக்கு நீச்சல் பயிற்சி
ADDED : பிப் 21, 2024 06:20 AM

திருநகர்: கிடா முட்டுப் போட்டியில் பங்கேற்கும் ஆடுகளுக்கு திருப்பரங்குன்றம் கண்மாயில் நீச்சல் பயிற்சி அளிக்கப்படுகிறது.
திருப்பரங்குன்றம் ஒன்றியம் தனக்கன்குளம் கண்மாயில் மதுரை சோலை அழகுபுரம் ராஜ்குமார், முகேஷ், அரவிந்தன், முத்துசாமி ஆட்டுக்கிடாக்களுக்கு பயிற்சி அளித்தனர். அவர்கள் கூறியதாவது:
பல பரம்பரைகளாக ஆடுகள் வளர்க்கிறோம். விரைவில் நடக்க உள்ள கிடா சண்டைக்காக நீச்சல் பயிற்சி, ஓட்டம், மரங்களில் முட்டுவது என பயிற்சி அளிக்கிறோம். எங்கள் பகுதியில் கண்மாய் இல்லாததால் இங்கே நீச்சல் பயிற்சி கொடுக்கிறோம்.
போட்டி நாளுக்கு ஒருமாதம் முன்பே பயிற்சி அளிப்போம். சாதாரண நாட்களில் புல் தீவனம் வழங்குவோம். போட்டி சமயங்களில் வைக்கோல், சோள நாற்றுகள், நவதானியங்களை உணவாகக் கொடுப்போம்.
ஜல்லிக்கட்டு காளைகளை போலவே, இக்கிடாக்களையும், குடும்ப உறுப்பினராகவே வளர்க்கிறோம். ஏனோ ஜல்லிக்கட்டுக்கு கிடைக்கும் முக்கியத்துவம் இப்போட்டிக்கு கிடைப்பதில்லை. போட்டிகளில் கிடா வென்றால் கிடைக்கும் பரிசை காட்டிலும் பன்மடங்கு செலவாகிறது. ஆனாலும் ஆண்டாண்டு காலமாக போட்டியில் கிடாக்களை பங்கேற்கச் செய்து வருவதால் தொடர்ந்து வளர்க்கிறோம், என்றனர்.

