
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் சி.பி.எஸ்.இ., பள்ளி இயக்ககம் சார்பில் தென்னிந்திய டேக்வாண்டோ போட்டி நடந்தது.
தமிழக அணி சார்பாக மதுரை எஸ்.பி.ஓ.ஏ. பள்ளி மாணவி ரக் ஷாம்பிகா 17 வயதிற்கு உட்பட்ட பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார். இதன்மூலம் அக். 9 முதல் 12 வரை உத்தரகாண்டில் நடைபெற உள்ள தேசிய டேக்வாண்டோ போட்டிக்கு தகுதி பெற்றார். மாணவியை பயிற்சியாளர் மனோஜ் பிரபாகரன், சர்வதேச பயிற்சியாளர் டிட்டோ பாராட்டினர்.

