ADDED : செப் 08, 2026 04:41 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரையில் மாநில அளவிலான ஹீரோஸ் கப் டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது.
பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். பூம்சே, க்யூருகி ஆகிய இரு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.
இப்போட்டியில் மதுரை டேக்வாண்டோ அகாடமி மாணவர்கள் 35 தங்கம் ,18 வெள்ளி, 12 வெண்கல பதக்கங்களை வென்று சப் ஜூனியர், கேடட் பிரிவில் ஓவர் ஆல் சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றினர். இம் மாணவர்களை தலைமை பயிற்சியாளர் நாராயணன், பயிற்சியாளர்கள் சஞ்சீவ், நவீன் குமார், பிலால் ,புவனேஸ்வரி, நரேன் பாராட்டினர்.
