நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம் புங்கங்குளம் ஆதிதிராவிடர் காலனிக்கு செல்ல ஒன்றரை கி.மீ., துாரம் சுற்றிச்செல்லும் நிலையில், மாற்று பாதை வழியாக சென்றால் 200 மீட்டர் துாரத்தில் சென்று விடலாம். இந்த பாதையை பட்டா நிலம் எனக்கூறி தனியார் விடமறுப்பதாக காலனி மக்கள் தொடர்ந்து அதிகாரிகளிடம் மனு கொடுத்து வருகின்றனர். நேற்றுமுன்தினம் கலெக்டர் சங்கீதாவிடம் முறையிட்டனர்.
நேற்று தாசில்தார் மனேஷ்குமார் தலைமையில் சம்பந்தப்பட்ட இடம் அளவீடு செய்யப்பட்டது. ஆவணங்களின்படி அது வண்டி பாதை என உறுதியானது. இதுகுறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் எனக்கூறி தாசில்தார் புறப்பட்ட போது உடனடியாக பாதை ஏற்பாடு செய்துதரக்கோரி முற்றுகையிட்டனர். அதிகாரிகள் சமரசம் செய்தனர்.