/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குன்றத்து ஆண்டவருக்கு பிப்.11ல் தைப்பூச விழா
/
குன்றத்து ஆண்டவருக்கு பிப்.11ல் தைப்பூச விழா
ADDED : பிப் 09, 2025 05:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் பழநி ஆண்டவர் கோயிலில் பிப். 11ல் தைப்பூச திருவிழா நடக்கிறது. மலை மேல் செல்லும் படிக்கட்டுகளின் ஆரம்ப பகுதியில் இக்கோயில் உள்ளது. பிப். 11ல் தைப்பூசத்தன்று 16 வகை திரவிய அபிஷேகங்கள் முடிந்து, அலங்காரமாகி சிறப்பு பூஜைகள் நடைபெறும். திருப்பரங்குன்றம், மதுரையைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பக்தர்கள் பால்குடம், காவடிகள் எடுத்து வருவர்.
அன்று சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இருந்து சுவாமி, தெய்வானை, முத்துக்குமாரசுவாமி, இரண்டு மூலவர்கள் ரத வீதிகளில் புறப்பாடாவர்.

